சந்திரபாபு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்... கூப்பிடு நடிகர் திலகத்தை... ஆர்டர் போட்ட இயக்குனர்
நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது பாவமன்னிப்பு. ஏ.பீம்சிங் இயக்கியது. இந்தப் படத்தின் கதையை எழுதியவர் சந்திரபாபு. இந்தப் படத்துக்கு அவர் முதலில் இட்ட பெயர் அப்துல்லா. இந்தப் படத்திற்கு சந்திரபாபு தானே கதை எழுதி நடிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி சில காட்சிகளையும் படமாக்கினார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அவரால் படத்தைத் தயாரிக்க முடியவில்லை. தொடர்ந்து கேள்விப்பட்ட ஏவிஎம் நிறுவனம் அந்தப் படத்திற்கான உரிமையை அவரிடம் இருந்து வாங்கியது. இயக்குனராக ஏ.பீம்சிங்கை நியமித்தது.
அவர் எடுத்த வரை படத்தைப் பார்த்து விட்டு சிறப்பான கதை. ஆனால் நாயகனாக நடிப்பவருக்கு முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அது வெயிட்டான ரோல். அதற்கு சந்திரபாபுவால் சரிவர நடிக்க முடியாது.
அதனால் சிவாஜி தான் இதற்கு சரியான ஆள் என்றும் தீர்மானித்தார். அவருக்காக கதையில் சில திருத்தங்களையும் செய்தார். இப்போது ஏவிஎம்முக்கு தர்மசங்கடமான சூழல். கதை சந்திரபாபுவுடையது. அவரை நாயகனாக நடிக்க வைத்தால் தான் படத்தை எடுக்க முடியும்.
ஆனால் இந்தப் படத்தில் என்ன செய்வது என்று யோசித்தனர். உடனே பீம்சிங் சிவாஜியிடம் இதுபற்றி பேச, அவர் சந்திரபாபுவிடம் ஒருவழியாக பேசி அவரது மனதை மாற்றினார். சந்திரபாபுவோ சிவாஜிக்காக பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தார். படம் மகத்தான வெற்றி பெற்றது.
ஆனால் படத்தில் சந்திரபாபுவின் பெயரைப் போட்டு கௌரவிக்கவும் இல்லை. வெற்றிவிழாவிலும் அவருக்கு பரிசுகள் வழங்கவும் இல்லை. ஆனால் அவருக்கோ அது பெரிதாகத் தெரியவில்லை. தன்னோட கதை. சிவாஜியின் அருமையான நடிப்பு. அதுவே போதும் என்ற மனநிறைவுடன் இருந்தார்.
ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961ல் நடிகர் திலகம் சிவாஜி, சாவித்திரி, தேவிகா உள்பட பலர் நடித்த படம் பாவமன்னிப்பு. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். இந்தப் படத்தை ஏவிஎம் விநியோகம் செய்தது. அத்தான் என்னத்தான், எல்லோரும் கொண்டாடுவோம், காலங்களில் அவள் வசந்தம், பாலிருக்கும் பழமிருக்கும், சிலர் அழுவார் சிலர் சிரிப்பார், வந்த நாள் முதல் உள்பட பல மனது மறக்காத பாடல்கள் உள்ளன.