என் மகன் விஜய்க்கு நான் பெயர் வைக்கவில்லையா? - கொந்தளித்த எஸ்.ஏ.சி...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரஜினிக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். இவரின் மாஸ்டர் திரைப்படம் மாஸ் வெற்றி அடைந்த பின், தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவரின் இயற்பெயர் விஜய்தான். ஆனால், இவரின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கிறித்துவ மதத்தை பின்பற்ற துவங்கியதால் ஜோசப் விஜய் ஆனார். இது பெரும்பாலானோருக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால், இந்த பெயருக்கு பின்னால் சில கதைகள் இருக்கிறது.
சமீபத்தில் ஒரு படவிழாவில் பேசிய விஜயின் தந்தை எஸ்.ஏசி தனது மகனுக்கு ஏன் விஜய் என பெயர் வைத்த காரணத்தை விளக்கினார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் ஹீரோவாக நடித்த காலத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பார்கள். அதேபோல், நான் இயக்கிய பல திரைப்படங்களில் ஹீரோக்களின் பெயர் விஜய்தான். விஜய் என்றால் வெற்றி என அர்த்தம். எனவேதான், என் மகனுக்கு விஜய் என பெயர் வைத்தேன் என தெரிவித்தார்.
ஆனால், வலைப்பேச்சு இணையதளத்தில் இதற்கு வேறு காரணம் கூறினர். எஸ்.ஏ.சந்திரசேகரின் தந்தை அதாவது, விஜயின் தாத்தா பெயர் நீலகண்டன். இவர் பழம் பெரும் சினிமா நிறுவனமான் விஜயா வாகினி ஸ்டுடியோவில் பணிபுரிந்தவர். விஜய் பிறந்த போது அவருக்கு பெயர் வைப்பதற்காக அவரை தூக்கிக்கொண்டு விஜயா வாகினி ஸ்டுடியோ நிறுவனர் நாகி ரெட்டியிடம் சென்றாராம். முதலில் பெண் குழந்தை என நினைத்த நாகி ரெட்டி தனது நிறுவனத்தின் பெயரான ‘விஜயா’ என பெயர் வைத்தாராம். பதறிய நீலகண்டன் இது ஆண் குழந்தை என அவருக்கு தெரிவிக்க, நாகிரெட்டி விஜய் என பெயர் வைத்தார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமுத்திரக்கனியை வைத்து எஸ்.ஏ.சி இயக்கியுள்ள ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சி ‘என் மகனுக்கு நான் பெயர் வைக்கவில்லை எனக் கூறுகிறார்கள். தயவு செய்து உண்மையை பேசுங்கள். திரைத்துறையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதைப்பற்றி பேசுங்கள். தயாரிப்பாளர்கள் பணம் தருவதில்லை.. பணம் வாங்கிக்கொண்டு நடிக்க வருவதில்லை.. அதுபற்றி பேசுங்கள்’ என அவர் பேசினார்.