More

சீப் பப்ளிசிட்டி தேடிய மீரா மிதுன் – இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் புகட்டிய பாடம்!

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வரும் நிலையில் அவரது பாலோயர்ஸ்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்துள்ளது.

Advertising
Advertising

நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். அதை அடுத்து கடந்த வாரம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார். அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் எந்த பப்ளிசிட்டிக்காக மீரா மிதுன் இப்படி எல்லாம் செய்து வந்தாரோ அதற்கு எதிர்மாறாக நடந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவருக்கு இருந்த பாலோயர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 3 லட்சமாகக் குறைந்துள்ளது.

Published by
adminram