More

இந்தியாவை விட்டு உடனே வெளியேறு: சென்னை ஐஐடி மாணவருக்கு உத்தரவு

குடியுரிமை சீர்திருத்த சட்டம் சமீபத்தில் மத்திய அரசால் அமுல்படுத்தப் பட்ட நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

Advertising
Advertising

இந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களும் சமீபத்தில் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின்போது மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பதாகைகளை தங்கள் கைகளில் வைத்துக் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பேரணியில் சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லின்டென்தல் என்பவரும் கலந்து கொண்டார். அவர் தனது கையில் வைத்திருந்த பதாகைகளில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை எடுத்து உடனடியாக குடியுரிமை துறை அதிகாரிகள் அந்த மாணவரை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் அவர் விசா விதிமுறைகளை மீறி விட்டதாகவும் எனவே உடனடியாக அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டனர் 

இந்த உத்தரவை ஏற்று கொண்ட அந்த மாணவர் நேற்று சென்னை இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து ஜெர்மன் திரும்பிச் சென்றார். உரிமை போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஜெர்மனி மாணவர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Published by
adminram