More

பிறந்து சில வாரங்களே ஆன குழந்தை… கொரோனாவால் உயிரிழந்த சோகம்!

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 9 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில் அந்தநாட்டில் பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்திருப்பது உலகையே உலுக்கியுள்ளது. கனக்டிகட்

மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு சோதனை செய்யப்பட்ட போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து சிகிச்சைப் பலனின்றி இன்று அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இது உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram