திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீடூ குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது தெரிந்ததே. வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். இருப்பினும் இதற்கு ஆதாரம் இல்லை என்றும் ஆனால் இந்த சம்பவம் நடந்தது உண்மை என்றும் அவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைரமுத்து கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் வைரமுத்துவுக்கு கிடைக்க இருந்த பல வாய்ப்புகள் பறிபோனதாகவும், முன்னணி இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வைரமுத்துவுக்கு வாய்ப்புகள் தரவில்லை என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் தனியார் பல்கலைக் கழகம் ஒன்று வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்க இருப்பதாக அறிந்த சின்மை தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கி எழுந்தார். அதுமட்டுமின்றி பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு டாக்டர் பட்டத்தை மத்திய அமைச்சர் ஒருவரே கொடுப்பதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
சின்மயி பதிவு செய்த இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த மத்திய நிதி அமைச்சர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட பல்கலைக்கழகமும் வைரமுத்துக்கு வழங்க இருந்த டாக்டர் பட்டத்தையும் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிய அழைப்பிதழ் ஒன்றை அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் வைரமுத்து பெயரும் மத்திய அமைச்சர் பெயரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
வைரமுத்துவுக்கு கிடைக்கவிருந்த டாக்டர் பட்டத்திற்கு சின்மயி ஒரே ஒரு டுவிட் பதிவு செய்து ஆப்பு வைத்தது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…