More

ஒத்தைக்கு ஒத்த பார்ப்போமா?… ராதாரவிக்கு எதிராக தேர்தல் களத்தில் சின்மயி!

சமீபத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் ராதாரவி, மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார் 

Advertising
Advertising

இதனை அடுத்து அவர் அவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென பாடகி சின்மயி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டப்பிங் யூனியன் சங்கத்திலிருந்து ராதாரவியால் நீக்கப்பட்டவர் தான் இந்த சின்மயி. அதன் பின்னர் நீதிமன்றம் சென்ற சின்மயிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மீண்டும் சின்மயி டப்பிங் யூனியன் சங்கத்தில் சேர்ந்து கொண்டாலும் டப்பிங் யூனியன் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை

இதுகுறித்து பலமுறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் சங்கத்தில் இருந்து வரவில்லை என்று சின்மயி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தநிலையில் ராதாரவியை எதிர்த்து போட்டியிடும் சின்மயின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை தன்னுடைய வேட்புமனு ஏற்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் செல்லவிருப்பதாக சின்மயியை கூறியிருப்பதால் திட்டமிட்டபடி இந்த தேர்தல் பிப்ரவரி 15 ஆம் தேதி டப்பிங் யூனியன் சங்க தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Published by
adminram