சின்மயி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்!

Published on: January 30, 2020
---Advertisement---

13950b510d78f4820975a4c7d75544c3

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் தற்போது டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் படவிக்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வராத நிலையில் திடீரென பாடகி சின்மயி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் 

ஏற்கனவே ராதாரவியால் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி அதன் பின்னர் நீதிமன்றம்வரை சென்று போராடி மீண்டும் டப்பிங் யூனியனில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சின்மயி மீடூ குற்றம் சாட்டியபோது அதனை ராதாரவி கேலி செய்தார் என்பதும் அதனால் இருவருக்கும் ஏற்கனவே பகை இருந்த நிலையில் தற்போது அந்த பகையை இந்த தேர்தல் மூலம் தீர்த்துக்கொள்ள சின்மயி முயல்வதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பலம் வாய்ந்த ராதாரவியை எதிர்த்து சின்மயி வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து தற்போது சின்மயிக்கும் ஆதரவுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் தனது டுவிட்டரில் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எந்த விஷயத்திலும் தைரியமாக ஈடுபட்டுவரும் சின்மயிக்கு இந்த விஷயத்திலும் வெற்றி கிடைக்கும் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் பல திரை உலக பிரபலங்களும் சின்மயிக்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டப்பிங் யூனியன் சங்கத் தலைவர் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment