விக்ரம் தலையில் கொம்பு... பல கைகள்....மிரட்டலான ‘மகான்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்....
விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். விக்ரமின் 60 வது படம் என்பதால், சீயான் 60 என அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தில் விக்ரம் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முக்கிய காட்சிகள் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து நேபாள எல்லையில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘மகான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், பைக் ஓட்டும் விக்ரமின் தலையில் கொம்பு இருப்பது போலவும், பின்னால் பல கைகள் இருப்பது போலவும் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பாராஜின் கடைசிப்படம் ‘ஜெகமே தந்திரம்’ ஏமாற்றமளித்தது. விக்ரம், துருவ் விக்ரமின் படங்களும் ரசிகர்களை கவரவில்லை. மூவருக்கும் ஒரு வெற்றி அவசியம் என்ற நிலையில் ‘ மகான்’ படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.