சியான் 60 படத்தில் 15 வயது சிறுவனாக விக்ரம்.. அதிலும் அவரே நடிப்பாரோ!…

ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு பின் கார்த்திக் சுப்பாராஜ் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரம் ஆகியோரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. வழக்கம் போல் இந்த திரைப்படத்தையும் ஒரு கேங்ஸ்டர் படமாகவே கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார். முதன் முறையாக விக்ரம் தனது மகனுடன் இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில் விக்ரம் 15 வயது, 30 வயது மற்றும் 50 வயது என 3 வயது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். 30, 50 கூட ஓகே. ஆனால், 15 வயது விக்ரம் எப்படி சாத்தியம் என்கிற ஆச்சர்யம் எழுந்துள்ளது. ஏற்கனவே ஆதவன் திரைப்படத்தில் சிறு வயது பையனாக சூர்யா நடித்திருந்தார். கிராபிக்ஸ் என்றாலும் அது மிகவும் பொருத்தமாக இருந்தது. அதேபோல், விக்ரமும் நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், பக்கா கேங்க்ஸ்டராக துருவ் விக்ரம் நடித்துள்ளாராம்..

Published by
adminram