ஆடையில் ஆவி.... பயமுறுத்தும் ராய் லட்சுமியின் "சிண்ட்ரெல்லா" ட்ரைலர்!

X
தென்னிந்திய திரைப்பட நடிகையான ராய் லட்சுமி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து, குண்டக்க மண்டக்க, தாம் தூம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கும் சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமி 3 கேரக்டர்களில் நடிக்கிறார். பேண்டஸி ஹாரர் படமான இதில் அழகான சிண்ட்ரெல்லா, பாடகி, வேலைக்கார பெண் துளசி என மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் வெளியாகி ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Next Story