குடியுரிமை சட்டம்: கமல், ரஜினியை கலாய்த்த பிரபல நடிகை!

Published On: December 19, 2019
---Advertisement---

01f280b816e9672ce504ef76411d7d38

மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழகத்திலும் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் செய்து வருகின்றனர்

குறிப்பாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் குடியுரிமை சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வரும் கமல்ஹாசன் நேற்று சென்னை பல்கலைக்கழக வாசல்வரை சென்று போராட்டம் செய்த மாணவர்களுக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குடியிருப்பு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எந்தவித போராட்டமும் செய்யாமல் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள கமலஹாசன், மாணவர்களை மட்டும் போராட்டம் செய்ய தூண்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் சென்றிருப்பதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று தான் கமல் கூறியிருக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த குடியுரிமை சட்டம் சரியானதா அல்லது தவறானதா என்று ரஜினிகாந்த் இதுவரை தனது கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினி கமல் ஆகிய இருவரையும் கலாய்க்கும் வகையில் நடிகை கஸ்தூரி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு …. ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல.  என்ன வாழ்க்கைடா 

கஸ்தூரி கூறியதுபோல் கமலஹாசன் கூறும் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த கருத்துகள் பலருக்கு புரியவில்லை, அதேபோல் ரஜினி இது குறித்து எதுவுமே கூறவில்லை இதுதான் உண்மை நிலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment