குடியுரிமை திருத்த சட்டம் ; அமலாபால் வெளியிட்ட  புகைப்படம் : குவியும் பாராட்டு

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. பல மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் பல இடங்களில் நடந்த மோதலால் வன்முறை கையில் எடுக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் போலீசாரே வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதன் காரணமாகவே, தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பெண் ஒரு பதாகையை கையில் ஏந்தியுள்ளார். அதில், நான் ஒரு இந்தியன் என எழுதப்பட்டு அதில் கிறிஸ்டியன், முஸ்லீம், ஜெயின் , புத்தீஸ்ட், சீக்கியர் என அனைவரும் அடக்கம் என்பது போல் எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Published by
adminram