பாதம் தொட்டு வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை: நித்யானந்தா அறிவிப்பு

1b7ce8444b723180da113478d1e2f29e

மீனாட்சியின் பாதம் தொட்டு வழங்கினால் மட்டுமே சீமானுக்கு குடியுரிமை என்றும், ஸ்ரீ கைலாஷ் நாடு ஒன்றும் திறந்த மடம் அல்ல என்றும், தமிழ் பிரிவினைவாதிகளை கைலாசம் அனுமதிக்காது என்றும் நித்தியானந்தா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு அறிவித்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சீமான் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பேசிய சீமான் அவர்கள் நகைச்சுவையாக ’எங்களுக்கு குடியுரிமை இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால் எங்கள் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுங்கள், நாங்கள் கைலாஷ் நாட்டுக்கு சென்று விடுகிறோம். எங்கள் அதிபர் நித்தியானந்தா இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை’ என்று நகைச்சுவையாக கூறி அவரே சிரித்துக் கொண்டார்

இந்த தகவல் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஸ்ரீ கைலாச என்ற பெயரில் இயங்கி வரும் நித்தியானந்தாவின் டுவிட்டர் பக்கம் ஒன்றில் சீமானின் இந்த நகைச்சுவைக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!!!

சீமான் நகைச்சுவையாக கூறியதற்கு எல்லாம் நித்தியானந்தாவின் ட்விட்டர் பக்கம் சீரியசாக பதில் சொல்லியிருப்பது சீமான் கூறிய நகைச்சுவையை விட பெரிய நகைச்சுவையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

 

Related Articles

Next Story