காதலன் திரைப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக நடித்தவர் துணை நடிகை கவிதா. பிரபுதேவா காவல் நிலையத்தில் படுக்க வைத்து பிரம்பால் அடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டை சினிமா படப்பிடிப்பு நடத்துவதக கூறி 2 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து அங்கு பிரைவேட் பார்ட்டி நடித்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இவரின் கூகுள் பே கணக்கிற்கு ரூ.1599ஐ நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்களுக்கு இலவசம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரமே செய்துள்ளார். அதோடு, திரைப்படங்களில் வருவது போல மது விருந்தின் நடுவே துள்ளல் இசையில் அழகிகளை வலம் வர செய்து, அவர்கள் மீது ஆண்கள் பணத்தை அள்ளி வீச வேண்டும் எனவும், அதிக தொகை கொடுப்பவர்கள் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி விபச்சாரமும் செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இந்த தகவல் தெரிந்த போலீசார் நேற்று இரவு அவரின் பண்ணை வீட்டை சுற்றி வளைத்து துணை நடிகை கவிதா, 11 பெண்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட 15 ஆண்களை மடக்கி பிடித்தனர். கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறி மதுவிருந்து நடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்ணை வீட்டுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…