கல்லூரி வாசல்…சுற்றிலும் மக்கள் – பெண்ணை தீ வைத்துக் கொல்ல முயன்ற நபர் !

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் பேராசிரியை ஒருவரைக் கல்லூரி வாசலில் வைத்து கொல்ல முயற்சி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா பிஸ்டே என்ற பெண் 25 வயது மதிக்கத்தக்க கல்லூரி பேராசிரியை. இவர் தான் பணிபுரியும் கல்லூரிக்கு நேற்று முன் தினம் வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது கல்லூரி வாசலை அவர் நெருங்குகையில் மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் அவர் மீது கெராசினை ஊற்றி தீயைப் பற்றவைத்துள்ளார்.

இதை அங்கிருந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைய போலிஸுக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில் மற்ற சிலர் நெருப்பை அணைத்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது முகம், கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பிகேஷ் நக்ரேல் என்பவரைக் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
adminram