சன்பிக்ஸர்ஸ் தயாரிப்பதாக இருந்த விஜய்யின் 65 ஆவது படம் இப்போது வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் தயாராகி தற்போது ரிலீஸுக்கு காத்திருக்கிறது. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் அந்த படம் வெளியாகும் என தெரிகிறது. இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்குவதாகவும் அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதும் உறுதியாகி இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்போது அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதில் இருந்து பின் வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் விஜய்தான் எனவும் கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. கொரோனாவுக்கு முன்பு அந்த படத்தின் பட்ஜெட் 180 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது கொரோனா காரணமாக சினிமா வியாபாரம் பயங்கரமாக அடிவாங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் பட்ஜெட்டை 120 கோடி ரூபாய்க்கு குறைக்க சொல்லி சன் பிக்சர்ஸ் நெருக்கடி கொடுத்துள்ளது.
இதற்கு விஜய் தரப்பும் முருகதாஸும் சம்மதிக்காததால் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கும் முடிவைக் கைவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி அவர்கள் பின் வாங்கினால் இந்த படத்தை மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…