திடீரென வாடகை வீட்டுக்கு சென்ற தளபதி விஜய்! என்ன காரணம்?

Published on: January 20, 2020
---Advertisement---

f67ac2de527381e12338a55601d4ad0a

தளபதி விஜய் தற்போது ’மாஸ்டர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது சொந்த வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது 

விஜய் கடந்த சில ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டை இடித்துவிட்டு பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டி கொண்டிருப்பதாகவும் இந்த பங்களாவின் மொத்த மதிப்பு ரூ 140 கோடி என்றும் இந்தியாவின் மிக காஸ்ட்லியான பங்களாக்களில் இதுவும் ஒன்று என்றும்  கூறப்படுகிறது 

இந்த நவீன பங்களா கட்டி முடிக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் இந்த பங்களாவின் கிரகபிரவேசம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த பணி முடியும் வரை வாடகை வீட்டில் தற்போது விஜய் தனது குடும்பத்தினர்களுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

அஜீத் ஏற்கனவே அஜீத் தான் குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு பிரமாண்டமான பங்களா கட்டி முடித்துவிட்ட நிலையில் விஜய்யும் புதிய பங்களா கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment