விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு தளபதி விஜய் அளிக்கும் இன்ப அதிர்ச்சி!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாஸ்டர்’ படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் சென்னையில் தொடங்க உள்ளது

இதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஜனவரி 1ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் தளபதி விஜய்யின் ஆலோசனைப்படி இந்த போஸ்டர் வரும் 16ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது 

வரும் 16ஆம் தேதி விஜய்சேதுபதியின் பிறந்தநாள் என்பதால் விஜய்சேதுபதியின் ரசிகர்களுக்கு தளபதி விஜய் கொடுக்கும் இன்ப அதிர்ச்சியாக இந்த செகண்ட்லுக் போஸ்டர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரில் விஜய், விஜய்சேதுபதி இருக்கும் இருக்கும் காட்சிகள் இருக்கின்றதாம்

மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய், விஜய்சேதுபதி மோதும் காட்சி படமாக்கப்படவுள்ளதாகவும், இதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் உள்ள ஒரு முக்கிய ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram