More

தளபதி 65… இயக்குனர் ஷங்கரா ? – வாய்ப்பில்லை ஏன் தெரியுமா ?

தளபதி 65 எனப் பெயரிடப்பட்டிருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக ஒரு வதந்தி உலாவிக்கொண்டு இருக்கிறது.

Advertising
Advertising

விஜய் தனது 64 படமான மாஸ்டரில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கிறது. இதையடுத்து அவரது அடுத்த படமான தளபதி 65 –ஐ சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதன் இயக்குனர் என்பது குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றில் விஜய்யின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் நேற்று முதல் ஒரு செய்தி உலாவ அதை விஜய்யின் நெருங்கிய வட்டாரம் மறுத்துள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்க ஷங்கருக்கு வாய்ப்பு இல்லை என்பதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

ஷங்கர் இப்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். அதன் வெளியீடு தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதுதான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் மே மாதம் தொடங்க இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை அவர் இயக்க வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது.

Published by
adminram