More

நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட சித்ரா – மலைபோல் குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

Advertising
Advertising

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சித்ராவிற்கு ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அத்துடன் மாப்பிள்ளையின் புகைப்படமும்  இணையத்தில் வெளியாகி ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர். தற்ப்போது தன்னுடைய நிச்சயதார்த்தம் போட்டோவை முதன்முறையாக வெளியிட்டு அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறார். கியூட்டான இந்த போட்டோ அவரது ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Published by
adminram

Recent Posts