திடீரென திருமணம் செய்த பிரபல நடிகை – ரசிகர்கள் வாழ்த்து

2002ம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை ஸ்ரீத்திகா. அதன்பின் கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம், கல்யாண பரிசு உள்ளிட்ட பல நாடகங்கள் இவர் நடித்துள்ளார். மேலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த ஷானிஷ் என்பவருக்கும் அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 30ம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இது முழுக்க முழுக்க குடும்பத்தார் நடத்தி வைத்த திருமணம் ஆகும். 

இதை ஸ்ரீத்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளர். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Published by
adminram