ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 20 ஆகிய ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றன
காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், பாஜக தனியாகவும் போட்டியிட்டன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து விடும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன
இந்த நிலையில் இந்த கருத்துக் கணிப்பின்படி தற்போது முன்னிலை நிலவரங்களின்படி காங்கிரஸ் கட்சியில் அபாரமாக முன்னிலை பெற்று வருகிறது. சற்று முன் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கூட்டணி 32 தொகுதிகளிலும் பாஜக 18 தொகுதிகளிலும் ஜேபிஎம் 2 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன
ஜார்கண்ட் மாநிலத்தில் 42 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டியை மிக நெருங்கி 32 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கி உள்ளது. இன்னும் 10 தொகுதிகளில் முன்னிலை பெற்றால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை இழந்த பாஜக தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் மிக அபாரமாக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்ற பாஜக அதன் பின் நடைபெறும் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…
முன்பெல்லாம் சினிமா…
தமிழ் சினிமாவில்…
ஏஆர்.ரகுமான், சாய்ரா…