More

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம்.. காங்கிரஸார் அதிர்ச்சி…

வசந்த் அன் கோ நிறுவனரும், கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்.பி.யுமான வசந்தகுமார் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Advertising
Advertising

கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த செய்தி தமிழக காங்கிரஸாரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது.

இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனின் சகோதரர் ஆவார். அதேபோல், தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram