அறந்தாங்கி நிஷாவை அழ வைத்த போட்டியாளர்கள் - பரபரப்பு வீடியோ

by adminram |

710b9652206edaa9928c3a815b64de3e

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் முட்டிக்கொண்டது. அதேபோல், சனம் ஷெட்டிக்கும், பாலாவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. சுரேஷுக்கும், அனிதாவுக்கும் இருந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்து கமல் முன்னிலையில் இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்.

அதன்பின், யார் முகமுடியோடு இருக்கிறார்கள் என்கிற பிரச்சனையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கும்,ரியோ ராஜுக்கும் இடையே முட்டிக்கொண்டது.

இந்நிலையில், அறந்தாங்கி நிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால், யாரிடமும் நான் கூறவில்லை என நிஷா கூறுகிறார். ஆனால், பிக்பாஸ் கேக் ஆர்டர் செய்து அதை பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், அப்போது தனது தாயை நினைத்து நிஷா அழுவது போலவும், வீடியோ காலில் அவரின் தாய் பேச குழந்தையின் கன்னத்தில் நிஷா முத்தம் வைக்கும் நெகிழ்ச்சியான சம்பவங்களும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Next Story