விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க அதைத் தயாரிக்க இருக்கிறாராம் முரளிதரனின் மனைவி.
பயோ பிக் படங்களின் மார்க்கெட் இந்திய சினிமாவில் நன்றாக இருப்பதால் இப்போது பல பயோபிக் படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.
ஆனால் இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, தமிழ் அமைப்புகள் சில, முரளிதரன் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும், அதனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய முக்கியமான விஷயம் இப்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தை தயாரிப்பதே முரளிதரன் தான் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அவர் மனைவி பெயரில் இந்த படம் தயாரிக்கப்படுகிறது. இதை வெளியிட்டால் மீண்டும் சர்ச்சைகள் எழலாம் என்பதால் ரகசியமாக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…