பரமசிவன் கெட்டப்பில் கூல் சுரேஷ்!.. இன்னும் என்னத்தை எல்லாம் பார்க்கணுமோ?.. நெட்டிசன்கள் கலாய்!

Published on: August 8, 2025
---Advertisement---

நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் விதவிதமான கெட்டப்பில் வந்து புது படங்களை ப்ரோமோஷன் செய்து வரும் நிலையில் தற்போது அவர் பரமசிவன் பாத்திமா படத்தின் நிகழ்ச்சிக்கு சிவன் வேடத்தில் வந்துள்ள வீடியோ சற்று முன் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக வலம் வருகிறார் கூல் சுரேஷ். அவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில், குறிப்பாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சாக்லேட் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைதொடர்ந்து காக்க காக்க, தேவதையைக் கண்டேன், திருடா திருடி மற்றும் சிங்கம் புலி போன்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும், கூல் சுரேஷ் 2018ஆம் ஆண்டு படித்தவுடன் கிழித்து விடவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார், இது அவரை மேலும் பிரபலபடுத்தியது. ஆனால் அவரது அநாகரிகமான பேச்சு காரணமாக சில சர்ச்சைகளையும் சந்தித்தார்.

நடிகர் கூல் சுரேஷ் படங்களின் முதல் நாள் முதல் காட்சிக்கு பிறகு திரையரங்குகளுக்கு வெளியே அவர் அளிக்கும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சிலம்பரசனின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் அவரது படங்களுக்கு ஆதராவாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

எம்.சுகுமார் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள பரமசிவன் பாத்திமா படம் வருகின்ற ஜூன் 6ம் தேதி வெளியாகவுள்ளது. தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஷெஷ்விதா ராஜு, சுகுமார், கூல் சுரேஷ், ஸ்ரீ ரஞ்சன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் கூல் சுரேஷ் சுமோ படத்திற்காக சுமோ வீரரை போன்று மேலாடை அணியாமல் வந்த நிலையில் இன்று பரமசிவன் பாத்திமா படத்தின் நிகழ்ச்சிக்கு சிவன் வேடத்தில் வந்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இந்துக் கடவுளான சிவ பெருமானை கூல் சுரேஷ் அவமதிக்கிறாரா? என்றும் இவரது அட்ராசிட்டிக்கு ஒரு எண்டே கிடையாதா? என்றும் கேள்விகள் கிளம்பியுள்ளன.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment