கூல் சுரேஷ் படத்திற்கு அஜித் பட டைட்டிலா? ஆனா என்ன காமெடி தெரியுமா?

by சிவா |

நடிகர் கூல் சுரேஷ்: தமிழில் எந்தவொரு படம் ரிலீஸானாலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து அனைவரும் ஆர்வமாக காத்திருப்பார்கள். நகைச்சுவை உணர்வுடன் படத்தை எந்தளவு பங்கம் பண்ண முடியுமோ பண்ணிவிடுவார் ப்ளூசட்டை மாறன். இதனாலேயே மக்களின் அபிமானங்களை வெகுவாக பெற்றார். அந்த வகையில் கூல் சுரேஷும் முதல் நாள் முதல் ஷோவை பார்த்து தியேட்டர் வாசலிலேயே படத்தை பற்றி விமர்சிப்பார்.

பஞ்ச் டையலாக் மன்னர்: அதுவும் பஞ்ச் டையலாக் கூறி படத்தை அவர் விமர்சிக்கும் விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுக்கும். இப்படி பிரபலமான கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களின் வரவேற்பை பெற்றார். அங்கு அவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் கலந்து கொண்ட சீசனில் இவர்தான் மூத்தவர். அதனால் மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு அட்வைஸராக இருந்து நல்ல முறையில் கொண்டு சென்றார் கூல் சுரேஷ்.

ஹீரோவாக கூல் சுரேஷ்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பும் அவருக்கு வந்தவண்ணம் இருக்கின்றது. ஏற்கனவே செல்அம் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்க இருந்த திரைப்படம் மஞ்சள் வீரன். ஆனால் அந்தப் படத்தின் சில பல பிரச்சினைகளால் டிடிஎஃப் வாசன் விலக ஹீரோவாக கூல் சுரேஷ் கமிட் ஆனார். அது சம்பந்தமான புகைப்படமும் வெளியானது.

அஜித் பட டைட்டில்:ஆனால் புகைப்படம் வெளியானதோடு சரி. படத்தை பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதற்கிடையில் மற்றுமொரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம் கூல் சுரேஷ். அந்தப் படத்தின் பூஜை இன்றுதான் போடப்பட்டது. இந்தப் படத்தின் டைட்டில் என்ன என்று கேட்ட போது இயக்குனர் தயங்கினார். உடனே கூல் சுரேஷ் ஏன் தயங்குகிறீர்கள்? அஜித் படத்தின் டைட்டிலைத்தான் வைத்திருக்கிறோம்.

ஏற்கனவே அஜித் நடிக்க இருக்கும் ஒரு படத்தின் டைட்டிலைத்தான் தேர்வு செய்திருக்கிறோம். அந்த டைட்டிலை எப்படியாவது வாங்கும் முயற்சியில் இப்போது இருக்கிறோம். அதற்காக தயாரிப்பு கவுன்சிலிலும் பேசியிருக்கிறோம் என்று கூறினார். மேலும் ஜனநாயகன் படம் ரிலீஸாகும் அதே தேதியில்தான் எங்கள் படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதுக்காக விஜய்க்கு போட்டி இல்லை,

ஜனநாயகன் ரிலீஸ் சமயத்தில் என் படமும் ரிலீஸானால் விஜய் ரசிகர்களும் என் படத்தை கவனித்து படத்தை பார்க்க வருவார்கள் என்று கூல் சுரேஷ் கூறினார். இது நான் நான்காவது முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் என்றும் கூல் சுரேஷ் கூறினார்.

Next Story