வேட்டையன் ஞானவேல் படம் இல்ல... லைகான்னாலே அலறும் ரஜினி ரசிகர்கள்..!
ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் எப்போது என்று பலரும் பேசி வருகின்றனர். இதுகுறித்து பத்திரிகையாளர் எஸ்.சங்கர் சொல்வது இதுதான்.
வேட்டையன் படம் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ்னு ரஜினியே சொன்னார். இந்தப் படத்துக்கு ரஜினி தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாம். படம் வருமா வராதான்னு தெளிவான தகவல்கள் இல்லை. போஸ்ட் புரொடக்ஷன் வேலையும் வேகமா நடக்கலை. ரஜினியோ டப்பிங்கும் இன்னும் ஆரம்பிக்கல.
படத்தைப் பற்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டாலும் வரலைன்னு தான் சொல்றாங்க. அக்டோபர்ல படம் வரலைன்னு லைகா மட்டும் தான் சொல்லல. மற்ற எல்லாரும் சொல்லிட்டாங்க.
ரஜினிக்காகத் தான் ஞானவேல் கதை எழுதிருக்காரு. அவருக்கான சினிமாவை இதுல எடுக்க மாட்டாரு. ரஜினியை வச்சித் தான் படமே. அவரு பெரிய அளவில் சாதித்த இயக்குனரும் இல்லை. ஒரு படம் மட்டும் தான் அவரு சாதிச்சிருக்காரு.
இவர் ஆசைப்பட்ட மாதிரி அந்தப் படத்தை எடுக்க முடியாது. ரஜினியைப் பொருத்தவரை அவர் பெஸ்ட் டைரக்டர். ரஜினிகிட்ட இருக்குற ஒரு டைரக்டர் மட்டும் வெளியே வந்தா அவ்ளோ தான். வேற எந்த டைரக்டரும் தேவையில்லை. கேமராவுக்கு முன்னாடி அவர் நடிச்சா கூட கேமராவுக்குப் பின்னாடி அந்தக் காட்சி எப்படி வரும்கற அறிவு அவருக்கு உண்டு.
ஜெயிலர் பங்ஷன்ல கூட பார்த்திருப்பீங்க. ஒரு டைரக்டர் என்ன செய்யணுமோ அதை நடிக்கும்போதே செஞ்சிடுற கலைஞர் அவர். ஒவ்வொரு காட்சி எடுக்கும்போதும் ரஜினியோட பங்களிப்பு அவரோட பார்வையில காட்சி அப்படித்தான் வந்துருக்கும்னு நான் நினைக்கிறேன்.
கூலி படத்தின் வேலைகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம் அந்த நிறுவனத்தோட வேலைகள் தான். லைக்கான்னு சொன்னாலே ரஜினி ரசிகர்கள் அலறுறாங்க. தர்பார் படம் எடுக்கும்போதே படம் ரிலீஸ்ல குழப்பம். அதுக்கு முன்ன காலா படத்து ரிலீஸ்ல சொதப்பல்.
அதுக்கு முன்ன 2.0 படத்துக்கும் அதே தான். அதை ரிலீஸ் பண்றப்பவே குறிப்பிட்ட தேதில வைக்க முடியாம அடுத்தடுத்து ரஜினி படங்கள். காலா, 2.0. ரிலீஸ்ல சொதப்பிட்டாங்க. இப்படி ரிலீஸ் தேதில லைக்காவுல நிறைய சொதப்பல்கள் இருக்கு. இதுல மாற்றுக்கருத்து இல்லை. ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியைப் பண்ணிருக்காங்க. கடைசில வந்த லால் சலாம் கூட அவங்க சொன்ன தேதில ரிலீஸ் பண்ணல.
ஆனா சன் பிக்சர்ஸ் எல்லாமே திட்டமிட்டு கரெக்டா நடக்குற நிறுவனம். அதனால இயல்பாவே ஒரு கலைஞனுக்கு அந்த மாதிரி கம்பெனில படம் பண்றதுக்கு விருப்பம் இருக்கும். ஜெயிலர் மாதிரியே கூலியும் ஒரே மாதிரி தான் பரபரன்னு சூட்டிங்ல இருந்து ரிலீஸ் வரைக்கும் நடக்குது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வேட்டையன் படத்தை இயக்குபவர் ஞானவேல். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகாசிங், மனோஜ் வாரியர், கிஷோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ரஜினியின் 170வது படம்சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கூலி. இது ரஜினியின் 171வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.