Categories: latest news

எவ்வளவு நாள்தான் அடுத்தவனுக்கே கைத்தட்ட? ‘கூலி’ படத்தில் அமீர்கான் வந்தது இதுக்குத்தானா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. அதற்காக சமீபத்தில் கூட ரஜினி ஜெய்ப்பூருக்கு பயணம் செய்தார். விமான நிலையத்தில் ரஜினியை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். ஜெயிலர் ,வேட்டையன் என தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்‌ஷனை கொடுக்கும் ரஜினி கூலி படத்தின் மூலமும் அதிக வசூலை கொடுப்பாரா என காத்திருக்க வேண்டும்.

தமிழ் இல்லாமல் கன்னடம், தெலுங்கு என பிறமொழி திரைப்படங்கள் வெளியாகி 1000 கோடி வசூலை சர்வசாதாரணமாக தொட்டு விடுகிறது. அதற்கு ஒரு காரணமாகவும் தமிழ் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அந்த படங்களை கொண்டாடுவதை நம்மூர் மக்கள்தான் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம்.

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் இதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அடுத்த படங்களுக்கே கைத்தட்டி கொண்டிருக்கிறோம். எப்பொழுது நம் படத்துக்கு கைத்தட்டுவது. புஷ்பா 2 படம் இந்தளவு கலெக்‌ஷன் ஆனதற்கு ஆந்திரா மக்கள் இல்லை. ஓவர் சீஸ் மற்றும் ஹிந்தி ரசிகர்களால்தான். ஓவர் சீஸில் 300 கோடி மற்றும் ஹிந்தியில் மட்டுமே 300 கோடி வசூலித்திருக்கிறது.

இப்படி ஹிந்தியிலும் படம் தட்டி தூக்க வேண்டும். இதற்காகத்தான் கூலி படத்தில் அமீர்கானை கொண்டு வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படமாக கூலி படம் அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்க ஹிந்தியிலும் காலூன்ற வேண்டுமென்றால் அங்கு ஒரு சூப்பர் ஹீரோவை தூக்க வேண்டும். அதற்காகத்தான் அமீர்கான் இந்தப் படத்திற்கு வந்திருக்கிறார்.

இன்னும் பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரும் ஜெய்ப்பூர் போயிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கூடிய சீக்கிரம் பட நிறுவனம் அமீர் கான் இருப்பதை உறுதி செய்து விடும். படமும் 1000 கோடியை வசூலிக்கும் என தனஞ்செயன் கூறினார்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago