க பெ ரணசிங்ம் மணிரத்னம் படத்தின் காப்பியா? இணையத்தில் பரவும் கருத்து!
விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க பெ ரணசிங்கம் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ரோஜா படத்தின் தழுவல் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது . இந்த படத்தின் கதை என்னவென்றால் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி தனி ஒருத்தியாக அவனின் மனைவி இந்தியாவுக்குக் கொண்டு வருவதே ஆகும்.
இதே போன்ற கதையமைப்புடன் 28 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படத்திலும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தன் கணவனை தனி ஆளாக போராடி மீட்டு வருவார் நாயகி. இதனால் இரண்டு படங்களும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டுள்ளன. ஆனால் இரண்டு கதைகளும் நடக்கும் கதைக்களமும் திரைக்கதை அமைப்பும் வேறு வேறு என்பதால் இதை நாம் தழுவல் என்று சொல்ல முடியாது. அதுமட்டுமில்லாமல் மணிரத்னமே ரோஜா திரைப்படத்தை சத்தியவான் சாவித்ரி கதையில் இருந்து தழுவிதான் உருவாக்கினார் என்றும் சொல்லப்படுவது உண்டு.