">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனா விவகாரம்…பொது அறிவே இல்லையா?… கடுப்பான அர்ச்சனா கல்பாத்தி
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 162 நாடுகளில் பரவியுள்ளது. மொத்தமாக 2 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.�
அதேபோல், இந்தியாவிலும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 2635 பேர் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவகிறார்கள்.
ஒருபுறம் கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ் ஆப்பில் பலரும் போலியான தகவல்களை பகிர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மத்திய மாநில அரசுகள் கொரோனா பற்றி தேவையான தகவல்களை வழங்கி வருகிறது. அதை நம்புங்கள். அதை விட்டுவிட்டு பொது அறிவே இல்லாமல் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கும் தேவையற்ற வாட்ஸ் அப் தகவல்களை பகிராதீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.
The Central and State Government have been extremely quick and accurate in terms sharing information with us. Please trust that and use common sense when u read a whatsapp forward Vs getting panicked and forwarding that to a hundred friends #UseCommonSense #Verify #DoNotPanic
— Archana Kalpathi (@archanakalpathi) March 18, 2020