More

கொரோனா பாதிப்பு – எல்லோரும் முகமுடி அணிய வேண்டுமா?

அதேபோல், இந்தியாவிலும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 2635 பேர் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவகிறார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில், கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் முகத்தில் முகமுடி அணிய வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் வந்துள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என இந்திய மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

அனைவரும் மாஸ்க் அணியத் தேவையில்லை. சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகள் இருந்தாலோ, கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டவரை பார்த்துக் கொள்ளும் நபர், சுகாதாரப் பணியாளர்கள் மாஸ்க்கை பயன்படுத்தினால் போதும். அவசியமில்லாமல் வாங்கி தேவையானவர்களுக்கு கிடைப்பதை கெடுக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை நடிகர் விவேக் பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts