More

கொரோனா தடுப்புப் பணி… களத்தில் இறங்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் !

கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஓவரை வீசி இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் ஜோஜிந்தர் சர்மா. அதன் இந்திய அணிக்கக சில ஆண்டுகள் பின்னர் ஓய்வு பெற்றார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவருக்கு அம்மாநில அரசு காவல்துறையில் டி எஸ் பி பதவி வழங்கியது.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது நாடெங்கும் கொரோனாவுக்கு எதிராக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஹரியானா மாநிலத்தில் கொரொனாவுக்கு எதிரான களப்பணியில் இறங்கி வேலை செய்துவருகிறார். இது சம்மந்தமாக அவரதுப் புகைப்படத்தைப் பகிர்ந்த ஐசிசி ‘2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோ… 2020 ஆம் நிஜ ஹீரோ… ‘ என அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

Published by
adminram

Recent Posts