ஆனால், ரேபிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் சமீபத்தில் புகார் கூறின. இதையடுத்து, 2 நாட்கள் ரேபிட் கருவிகளை பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. அதன் ரேபிட் கருவியின் தரத்தை நிபுணர்கள் பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸை கண்டறிய ரேபிட் கருவிகள் சிறந்தவை அல்ல. உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளை கண்டறிய மட்டுமே ரேபிட் கருவிகள் உதவும். கொரோனா வைரஸை கண்டறிய பி.சி.ஆர் கருவிகளே சிறந்தவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் எனவும், கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…