Home > நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த நடிகைக்கு கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி
நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த நடிகைக்கு கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி
by adminram |
இதைத்தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷிகா மல்கோத்ரா தனது நர்ஸ் பணியை துவங்கி மக்களுக்கு சேவை செய்யப்போவதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே நர்ஸ் பட்டம் பெற்றவர். கடந்த 6 மாதங்களுக்கும் மேல் அவர் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை செய்து வந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் விளைவாக அவரின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தான் சிகிச்சை பெறும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘அலட்சியமாக இருக்க வேண்டாம். நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
View this post on InstagramA post shared by Shikha Malhotra (@shikhamalhotraofficial) on
Next Story