கோயம்புத்தூரில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றும் 51 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் 90க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பணியாற்றிய 90 ஊழியர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 51 பேருக்கு பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது.
இதனால் அந்த கடைக்கு வந்து சென்றவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், அரசு மருத்துவமனைகளில் சோதனைகள் செய்து கொள்ளவும் நகராட்சியால் வலியுறுத்தப்பட்டுள்ளனர். லாக்டவுன் காலத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…