ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் காப்பகத்தில்18 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அசோக் நகரில் ஒரு காப்பகம் நடத்தி வருகிறார். அந்த ட்ரஸ்ட்டில் இருக்கும் 15 மாணவ மாணவிகளுக்கும், 3 பணியாளர்களுக்கும் 2 சமையல் காரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.
இந்த செய்தியை நடிகர் ராகவா லாரன்ஸே பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய பதிவில் ‘ரசிகர்களே, ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துகொள்ள போகிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் காப்பகம் திரும்பியுள்ளனர். நான் நம்பியது போல எனது சேவை என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சேவையே கடவுள். உதவி செய்த அமைச்சர் வேலுமணி மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.
Viduthalai part2:…
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…