பாலிவுட்டின் பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் இருவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் மிகப் பிரபலமான இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண ஜோஹர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய ஹை தில்கே ஹை முஷ்கில் என்ற படம் விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயெ தனது தாய் மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர் இருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வீடியோ வெளியிட்டுள்ள கரண் ஜோஹர் ‘ஆம். அது உண்மைதான். இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எங்கள் அனைவருக்கும் சோதனை நடந்தது. ஆனால் அதில் எங்களுக்கு தொற்று இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும் நாங்கள் அனைவரும் 14 நாட்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…