வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள் மூலமாக இந்நோய் தமிழகத்திலும் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 2635 பேர் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்படு கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 28 நாட்கள் அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிகவளாகங்கள், பெரிய கடைகள் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம்..
குளிர்சாதன பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை; திரைச்சீலைகளும் அகற்றப்படும்.
கால்டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுரை.
கொரோனா எதிரொலியாக மலேசியாவில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள், பயணிகளை மீட்க விமானங்கள் அனுப்பப்படும்.
ஏர் ஆசியா விமானங்கள் மூலம் மாணவர்கள் டெல்லி, விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்படுவர்- அமைச்சர் ஜெய்சங்கர் .
அரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய ஆயிபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்குமார் பணியிடை நீக்கம் – மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
சிஏஏ-க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. கொரோனா எதிரொலியாக போராட்டக்குழுவினர் அறிவிப்பு.
கொரோனா எதிரொலியால் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து.
உதகையிலிருந்து-குன்னூர் வரை இயக்கப்படும் பயணியர் மலை ரயில் போக்குவரத்து சேவையும் முற்றிலுமாக ரத்து.
கொரோனா அச்சுறுத்தல் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.
சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைப்பு – மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது – வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்..
பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது – வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்.
வெளி மாநில பேருந்துகள் தமிழக பணிமனைகளிலும் வெளிமாநிலம் செல்லும் தமிழக பேருந்துகள் அந்தந்த மாநில பணிமனைகளிலும் சுத்தம் செய்ய உடன்பாடு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் எதிரொலியாக ராமேஸ்வரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது, மேலும் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம் இன்று முதல் 31ம் தேதி வரை மூட DRDO உத்தரவு.
தஞ்சை பெரிய கோவிலில் கரோனா வைரஸ் அச்சத்தால் கோவில் இன்னும் சற்று நேரத்தில் மூடப்பட இருப்பதால் கோவிலில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…