உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் நேற்று வரை 11000 ஆகவும் தமிழகத்தில் 67 ஆகவும் இந்த எண்ணிக்கை இருந்தது. நேற்று மற்றும் 17 புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் நான்கு பேர் குணமாக ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவரின் எண்ணிக்கை 74 ஆக இருந்தது.
இந்நிலையில், தற்போது புதிதாக 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த 50 பேரும் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள். அந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 1131 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
அதில், 515 பேரை சோதனை செய்ததில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்னும் சிலரின் மருத்துவ பரிசோதனையின் அறிக்கைகாக காத்திருக்கிறோம். டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தயவு செய்து தாங்களாகவே முன்வந்து தகவல் கூறுங்கள் என அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் எனவும், உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.
Biggboss Tamil:…
Game Changer:…
OTT Tamil:…
விஜய் சேதுபதி…
தமிழில் நல்ல…