More

கொரோனா பீதி… மருத்துவர்களை வீட்டைக் காலி செய்ய சொல்லும் உரிமையாளர்கள் !!

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை வீடுகளை காலி செய்ய சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

Advertising
Advertising

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 4,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு இரவு பகலாக அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் எய்ம்ஸில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தங்கியிருக்கும் வாடகை வீடுகளில் இருந்து  உரிமையாளர்கள் வெளியேற சொல்வதாகவும் பலரைக் கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது சம்மந்தமான எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதுஅதையடுத்து அமித்ஷா அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் டெல்லி மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்

Published by
adminram