More

கொரோனா முன்னாடி ஜேம்ஸ்பாண்ட் ஒன்னுமில்ல – படத்தை தள்ளிவைத்த தயாரிப்பு நிறுவனம் !

பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரைக் நடித்து வரும் நோ டைம் டு டை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

டேனியல் கிரெய்க், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசி படமான நோ டைம் டு டை வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் உலகமெங்கும் அதிகமாகியுள்ள நிலையில் இப்படத்தை ஐந்து மாதங்கள் தள்ளி வைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

எவ்வளவு பெரிய வில்லனாக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கண்ணுக்கே தெரியாத ஒரு வைரஸூக்கு அடிபணிந்து பின்னோக்கி போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இங்கிலாந்தில் நவம்பர் 12ம் தேதியும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் நவம்பர் 25ம் தேதியும் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Published by
adminram

Recent Posts