கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் சம்மந்தப்பட்ட கடையில் சிக்கன் வாங்கினால் கொரோனா பரவும் என பீதியைக் கிளப்பிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெய்வேலியில் பக்ருதீன் அலி முகமது என்பவர் சிக்கன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அந்த கடையில் தினமும் 17 வயது இளைஞர் ஒருவர் சிக்கன் பகோடா வாங்கி தின்று வந்துள்ளார். இந்நிலையில் வாங்கிய சிக்கனுக்கு ஒழுங்காக காசு கொடுக்காமல் பாக்கி வைத்துக் கொண்டே சென்றதால் அவருக்கு சிக்கன் தர மறுத்துள்ளார் கடை உரிமையாளர்.
இதனால் கோபமான அந்த இளைஞன், சமூக வலைதளங்களில் சம்மந்தப்பட்ட கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதால் தனக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஆகிய உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், அந்த இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல பேர்…
சிறுத்தை சிவா…
ரஜினி சிவாஜி…
Sun serials:…
Good Bad…