கொரோனா 3வது அலை தாக்குமா? – என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்?

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் கொரோனா 2வது அலை பல மனித உயிர்களை பலியாக்கி விட்டது. குழந்தைகள் பெற்றோர்கள்  இழந்துள்ளனர். பெண்கள் கணவர்களை இழந்துள்ளனர். பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா 2வது அலையின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா 3வது அலை அக்டோபர் மாதம் உருவாகும் என பலரும் கூறி வருகின்றனர். மேலும், மேலும், இந்த 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. ஒருபக்கம் லண்டன், காங்கோ உள்ளிட்ட சில நாடுகளில் 3ம் அலை பாதிப்பு துவங்கிவிட்டதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.  எனவே, மத்திய அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது தெரியவில்லை.

அதேநேரம் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது. இது போல் பல மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம், தடுப்பூசி போடுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவையே கொரோனாவை தடுக்கும் ஆயுதங்கள் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். 

Published by
adminram