தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குருவி கண் போன்ற ஊஞ்சல் இருக்கையில் அமர்ந்து செம கியூட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது.
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…
பாரதிராஜாவால் தமிழில்…
தமிழ் சினிமாவில்…