பொதுமக்கள், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் என பலரும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். குறிப்பாக போக்குவரத்து தொடர்பான தொழில்கள் மற்றும் வேலைகளில் இருந்தவர்கள் கடந்த 4 மாதங்களாக எந்த வருமானமும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். எனவே, குடும்பத்தை நடத்தவும், அன்றாட செலவை சமாளிக்கவும் அவர்கள் கிடைக்கும் வேலையை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கார் உரிமையாளர் ஒருவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு சைக்கிளில் டீ விற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
நாகை அருகேயுள்ள நாகூரில் வசிப்பவர் முஹம்மது மைதீன். கடந்த 20 வருடங்களாக வாடகைக்கார் ஓட்டி வந்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து 2 வருடங்களுக்கு முன்பு வங்கியில் லோன் பெற்று மாத தவணை கட்டும் திட்டத்தில் சொந்தமாக ஒரு காரை வாங்கி ஓட்டி வந்தார்.
கொரோனா ஊரடங்கு இவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. காரை ஓட்ட முடியாத நிலையில், அவரால் வங்கிக்கு மாத தவணையை கட்ட முடியவில்லை. எனவே, வேறுவழியின்றி சைக்கிளில் டீ, வடை விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சென்னைக்கு சவாரி சென்றால் செலவு போக ரூ.1500 கிடைக்கும். ஆனால், டீ விற்பதில் ஒருநாளைக்கு ரூ.500 கூட முழுதாய் கிடைப்பதில்லை எனவும், கடுமையான சிரமத்தில் குடும்பத்தை நடத்தி வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு வசித்து வரும் கடந்த 3 மாதங்களாக வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மொத்தத்தில் இந்த கொரோன ஊரடங்கு தொழிலதிபர்களையும் ஓட்டாண்டி ஆக்கியுள்ளது. இவையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் கோரிக்கையாக இருக்கிறது.
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…