சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று வரும் நிலையில் மதுரை அருகே சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் பதவியேற்ற அடுத்த நிமிடமே அலுவலகத்தின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மதுரை அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஒன்றியத்தின் சேர்ந்த செல்லம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சுயேச்சை கவுன்சிலர் அரவிந்தன் என்பவர் இன்று பதவி ஏற்பதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். அவர் பதவியேற்ற உடன் அடுத்த சில நிமிடங்களில் அந்த அலுவலகத்தின் பின்பக்கம் இருந்த சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கடும் போட்டியில் உள்ளனர். இரு கட்சிகளுக்கும் சம அளவில் கவுன்சிலர் எண்ணிக்கை இருப்பதால் சுயேச்சை கவுன்சிலர் ஆதரவு கொடுக்கும் கட்சிக்கே ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் சுயேச்சை கவுன்சிலர் அரவிந்தன் ஆதரவைப் பெற இரு கட்சியை சேர்ந்தவர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாசலில் தயார் நிலையில் இருந்தபோது பதவியேற்றவுடன் அவர் பின்பக்கமாக தப்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த தொகுதியில் அமமுகவை சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் திமுக மற்றும் அதிமுக வுக்கு ஆதரவு இல்லை என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…