நாயை கல்லைக் கட்டி ஆற்றில் போட்ட தம்பதி –சைக்கோ தம்பதிகளின் வெறிச் செயல் !

இங்கிலாந்து நாட்டில் தாங்கள் வளர்த்த நாயையே ஆற்றில் கல்லைக் கட்டி போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் ஒரு தம்பதியினர்.

இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள ட்ரண்ட் ஆற்றில் நாய் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்ததாக தகவல் வரவே மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்றனர். நாயைக் காப்பாற்ற முயன்ற அவர்களை அதிர்ச்சியளிக்கும் விதமாக நாயோடு ஒரு கல்லைக் கட்டி யாரோ போட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாயை காப்பாற்றிய அவர்கள் அதன் கழுத்தில் இருந்த சிப்பை வைத்து அது யாருடையது எனக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
adminram