தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்திய நாட்டின் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விருது தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் காந்திக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என அனில் தத்தா ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ‘காந்தியின் மீது இந்த நாடு வைத்திருக்கும் மதிப்பு எந்த விருதுக்கும் அப்பாற்பட்டது. எனவே காந்திக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது.’ எனக் கூறியது. இந்த விருது தொடர்பாக மத்திய அரசிடம்தான் மனுதாரர் முறையிட வேண்டும் எனக் கூறியது. மேலும் ’மகாத்மா முன்னால் பாரத ரத்னா விருதெல்லாம் பெரிதா ?’ எனக் கேள்வி எழுப்பினர்.
இதைக்கேட்ட மனுதாரர் ‘அப்படியானால் மகாத்மா பாரத் ரத்னாவை விட சிறந்தவர் என்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கூறினார். அதற்குப் பதிலளித்த நீதிமன்றம் ‘அதுபற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…